Thursday, September 18, 2014

மஞ்சள் காமாலை நோய்க்கு மூலிகை மருந்து

மஞ்சள் காமாலை நோய்க்கு மூலிகை மருந்து

எலுமிச்சை  :

எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும்.

கீழாநெல்லி :

கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

 கடுக்காய்  :

அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை  நீரில் கலந்து குடிக்கலாம்.
 

அருநெல்லி :

அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

கொன்றைப் பூ :

கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

சுரை இலை :

சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

தும்பை இலை :

மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
 

கரிசிலாங்கண்ணி இலை :

கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மஞ்சள்காமாலை நோயினை கண்டறிய  இரத்தத்தில் பிலிரூபின் டெஸ்ட் -  Billirubin Test -Total 
 
1 - 0.8 mg -இருந்தால் அது நார்மல் 
2 - 1,5 mg -இருந்தால் அது துவக்க நிலை 
3 - 4 mg  மற்றும் அதற்கு மேல் இருந்தால் நோய் முற்றிய நிலை

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...