Tuesday, September 16, 2014

வயிற்றுப்போக்கு குறைய

            வயிற்றுப்போக்கு குறைய

1. ஒரு மாதுளை பழத்தின் சுளைகளை நன்றாக வேக வைத்து அதனுடன் இரண்டு
தேக்கரண்டி தேன்  சேர்த்து சாப்பிடவும்.
 
2. வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

குறிப்பு : கசகசா தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதைஅதிகம் உண்டால் மயக்கம் வரும்.
 
3. கடுக்காயைக் கொட்டை நீக்கித் தோலைச் சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனில் 1/2 கிராம் முதல் 1 கிராம் நாளும் இருவேளை உண்டுவர வயிற்றுப்போக்கு குணமாகும்.
 
4. மா மரத்தின் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும். 
 
5. எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். 
 
6.  பப்பாளிபழம் சாபிட்டால் தொடர் வயிற்றுபோக்கு குறையும்.
 
பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக தகுந்த டாக்டரை அணுகி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது அவசியம் ஆகும். 


குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு (Infantile diarrhoea)

குழந்தைக்கு அடிக்கடி நீருடன் மலம் கழிதல், அழுகை, அடிக்கடி மலம் இளகலாகச் செல்லுதல், வயிற்று உப்புசம், காற்று பிரிதல், ஆசனவாய் சிவந்து காணப்படுதல், பச்சை அல்லது மஞ்சள் நிறத்துடன் மலம் திரிதிரியாக துர்நாற்றத்துடன் வெளியேறுதல் ஆகியவை குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
 
வயிற்றுப் போக்கு இருந்தால் கொதித்து ஆறிய தண்ணீரை பாலாடையில் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். உப்பு, சர்க்கரை கரைசல் கொடுக்கலாம். 
 
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.
 
குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் பராமரிப்பதும் அவசியம்.
 
இதற்கு கைப்பக்குவ மருந்தாக பொடுதலை குடிநீர் கொடுக்கலாம்.
 
செய்முறை : 
 
ஒரு கைப்பிடி அளவு பொடுதலை, 5 கிராம் ஓமம் ஆகியவற்றை சேர்த்து, 100 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். 25 மில்லியாக வந்ததும் வடிகட்டி ஒரு பாலாடை அளவில் தினமும் 3 வேளை குழந்தைக்கு கொடுக்கலாம்.
 
சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட தயிர் சுண்டி சூரணம், ஆமையோட்டு பற்பம் ஆகியவையும் நல்ல மருந்தாகும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...