Tuesday, August 12, 2014

போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் பலமடைய

         போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட
                                       கல்லீரல் பலமடைய

தடுப்பு முறைகள்

 கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது.

திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றை தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாக  வெளியேறும்.

எலுமிச்சை சாறை தண்ணீருடன் கலந்து குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது.

தினசரி சமையலில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது.

சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும்.

கல்லீரல் கோளாறு  உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுக்கவும், அதிகளவில் சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல் குறைந்தளவில் பயன்படுத்த வேண்டும்.

கல்லீரலை வலுவாக்கும் துளசி


கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு தண்ணீர், உணவு எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வரும்.

மாதுளம்பழம், துளசி இலைகளை எடுத்து கழுவி,  அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து காய்ச்சி, அரை டம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது  பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், மலேரியா,  நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.

எலுமிச்சம்பழம், தேன், தக்காளி  ரசமும் சம அளவு கலந்து காலை, மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர்கேடுகள் மறைந்து உடல்  தெம்பாக இருக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலம் பெறும்.

கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்  பழத்தைப்பிழிந்து குடித்து வர விரைவில் குணமாகும்.

உணவில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் நெய், சீரகம்,  பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும். இவற்றை முக்கியமாக பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன்  செயல்படும்.

குறிப்பாக புகை, மது, இரவில் அதிக நேரம் கண் விழிப்பு, அதிகமாக காபி குடிக்கும் பழக்கமுள்ளவர்கள் இவற்றை உண்பதன் மூலம்  கல்லீரல் அழற்சி ஏற்படாது.

மது அருந்துவது கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பதால் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...