முளைகட்டிய பச்சைப் பயறு சுண்டல்
வேண்டியவைகள்:
முளை கட்டிய பச்சைப் பயறு – அரை கப்
காரட் துருவல் – அரை கப்
துருவிய தேங்காய் – சிறிது
பச்சைமிளகாய் – ஒன்று அல்லது விருப்பம்.
இஞ்சித் துருவல் – சிறிது
எலுமிச்சை – பாதி
கொத்தமல்லித்தழை – விருப்பத்திற்கு
தாளித்துக் கொட்ட – கடுகு, சிறிது எண்ணெய்
செய்முறை:
இட்லி ஸ்டாண்டின் குழிகளில் முளைக்கட்டின பயறை நிரப்பி நீராவியில், ஆவி தொடர்ந்து 6, 7 நிமிடங்கள் தொடர விட்டு பயறை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயில் கடுகை வெடிக்கவிட்டு இஞ்சி, நறுக்கிய மிளகாயை வதக்கவும். இதில் வெந்த பயறு மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி இறக்கவும். இறக்கியதில் காரட், துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து எலுமிச்சை சாற்றைப் பிழியவும். கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும். இதையே பயறை வேகவைத்து வடித்தும் செய்யலாம். செய்து ருசியுங்கள்.

No comments:
Post a Comment