Monday, August 25, 2014

எளிய இயற்கை மருத்துவம்

              எளிய இயற்கை மருத்துவம் :

சளி, இருமல் நீங்க:

திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்

செய்முறை:
இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.

உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:

இஞ்சி, வெற்றிலை, பூடு, மல்லி

செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.

வாயு மருந்து:

பூடு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்

செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.

பித்தம் அதிகம் இருப்பின்:


 இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,

செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:

சுக்கு, பூடு, வாவளங்காய், பெருங்காயம், இந்தி பூ, ஓமம்

செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.

விஷக்குடி மருந்து:

சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.

செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...