Thursday, September 4, 2014

புற்று நோய் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

நம் பழக்க வழக்கங்களை
மாற்றிக் கொண்டால், நோய்களை
விரட்டுவது சாத்தியமே…!

புற்று நோய் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சாப்பிட வேண்டியவை..

காளான், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள், பூண்டு, முட்டைகோஸ், காலிபிளவர், தக்காளி, கிரீன் டீயும் பருகலாம். இவற்றில் வைட்டமின் சியும் ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் தன்மையும், பீட்டா கரோடின் மற்றும் ஃபோலிக் அமிலங்களும் உள்ளதால் அவை புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு அதன் வீரியத்தை குறைத்துவிடும்.

தவிர்க்க வேண்டியவை…..

ஊறுகாய், வெள்ளை ரொட்டி, அரிசிச் சோறு, சோடா மற்றும் குளிர்பானங்கள், எண்ணெயில் பொறித்த மைதா- கடலை மாவு பண்டங்கள், சிகப்பு மாமிசம் மற்றும்  எண்ணெயில் சிப்ஸ வகைகள் ஆகியன. இந்த உணவுகளில் புற்றுநோயை அதிகரிக்கும் வீரியம் அதிகம். அதிக சர்க்கரை, கொழுப்பு, அமிலங்கள் கொண்டவை இவை. ஆகவே தவிர்ப்பது மிக மிக நல்லது.

Think positivelyஎப்படித் தான் வாழ்வது ?

எந்நாளிலும் எந்த சூழ்நிலையிலும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பேருண்மையை புரிந்துகொண்டு, உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு இயற்கை சார்ந்த உணவு முறைகளை கையாண்டு, எளிய உடற்பயிற்சிகள் தினசரி செய்து மனதை மகிழ்ச்சியுடனும் பரோபகார சிந்தனையுடனும் வைத்திருந்தால் எந்த நோயும் அண்டாது.

இந்த உடலானது இறைவன் கொடுத்த பரிசு. நமது மருத்துவமோ அறிவியலோ ஒருபோதும் இதை ஈடு செய்ய முடியாது. பேணி பாதுகாத்து நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துக்கிறோம்!


No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...