மூலிகை மருத்துவ குறிப்புகள் :
உடல் பருமன் குறைக்க:
பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும்.
வயிற்றுப் பூச்சிகள் ஒழிய:
பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும்.
சீதபேதி குணமாக:
கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
பசி உண்டாக:
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.
ஞாபகசக்தி வளர:
வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும்.
அலுப்பு தீர:
மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.
நல்ல தூக்கம் வர:
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும்.
குளிர் காய்ச்சல் நீங்க:
நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும்.

No comments:
Post a Comment