Friday, September 5, 2014

மூலிகை மருத்துவம்

             மூலிகை மருத்துவம் :

பிரயாணத்தின் போது வாந்தி நிற்க:

தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

நெஞ்சு சளி நீங்க:


தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.

தும்மல் நிற்க:


தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

காச நோய் குணமாக:


செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும்.
 

சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க:

குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள  குணமாகும்.

மூச்சுத்திணறல் குணமாக:


தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும்.

வாந்தி நிற்க:


வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும்.

ஒற்றைத் தலைவலி குணமாக:


துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும்.

மூக்கில் நீர் வடிதல்:


ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
 

மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க:

மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும்.

கண் எரிச்சல் நீங்க: 


அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...