மூட்டு வலி நீங்க...
(முழங்கை, முழங்கால், கணுக்கால்)
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
சாப்பிடும் விதம் :
முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும். நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.
தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

No comments:
Post a Comment