Monday, September 1, 2014

4 பத்து நாளில் பத்து கிலோ எடை குறைய

உடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?
 குறையும். ஆனால் நான்கு பத்து நாளில் குறையும்.. அதாவது நாற்பது நாளில் குறையும் – கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால்.

1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

தேவையானவை ( 1 நாளைக்கு) :


               கொடம்புளி ஐம்பது கிராம், கொள்ளு ( கானப்பயறு ) இருபது கிராம், வாய்விடங்கம், சுக்கு, மரமஞ்சள் மற்றும் தேன் ஐந்து மிலி.
கொடம்புளி சூப்  செய்முறை :

கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.

கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு  மிலி வெந்நீரில் ஊற வைத்து விடணும் .

காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
                  இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்க கூடாது.

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.

6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது.

8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொறிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.

9 .எண்ணையில் பொறித்த உணவுகளை, சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.

10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேசக் கூடாது.

குறிப்பு : தேவைப்படும் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...