எளிய இயற்கை மருத்துவம்
வாயுத் தொல்லை நீங்க:
பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடு:த்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது. இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
சளித் தொல்லை நீங்க :
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
ஆஸ்துமா இருந்தால்:
வேப்பங் கொட்டை 3, திப்பிலி.
வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.
மஞ்சள்காமாலையாக இருப்பின்:
வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.
வாய்ப்புண்:
மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.
தீப்புண்:
சுண்ணாம்பை நீரில் கரைத்து மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.
ஜலதோஷமாக இருப்பின்:
சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.
வாய்ப்புண்ணாக இருப்பின்:
மாசிக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம் இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.

No comments:
Post a Comment