Saturday, August 16, 2014

பானகம்

     மறந்து போன மருத்துவ உணவுகள்

உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த உணவுளில் ஒன்று

பானகம்

தேவையானவை:


எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் – 10, நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு, சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – 10.
செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.


மருத்துவப் பயன்:


தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...