மறந்து போன மருத்துவ உணவுகள்
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த உணவுளில் ஒன்று
வல்லாரைக் கீரைக் கூட்டு
தேவையானவை:
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி – 50 கிராம், மிளகு – 5 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

No comments:
Post a Comment