மறந்து போன மருத்துவ உணவுகள்
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த உணவுகளில் ஒன்று
மருந்து சாதம்
தேவையானவை:
சுக்கு – ஒரு துண்டு, வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன், திப்பிலி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.
மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.

No comments:
Post a Comment